தேர்தலை நடத்துவதில் அதிகாரிகள் அக்கறையில்லை

250 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய தேவை அதிகாரிகளுக்கு இல்லை என்று எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் முன்னாள் தலைவர் அசோக பீரிஸ் கூறுகின்றார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் சில மேற்கொள்ள வேண்டியுள்ள போதிலும், அதனை செய்வதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளாது உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் சேவைக்காக அரச பணியாளர்களை ஈடுபடும் ´அரச சேவை யாருக்காக´ என்ற தலைப்பில் காலி பிரதேசத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அசோக பீரிஸ் கூறுகின்றார்.