குறிப்பாக வடக்கு மாகாணத்தில் அமுல்படுத்த உத்தேசித்துள்ள இருபத்தையாயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பில் இதுவரை உரிய தெளிவுப்படுத்தல்கள் கிடைக்கவில்லை வீடமைப்பு அதிகார சபையால் பல வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதும் அவை இடை நடுவில் கைவிடப்பட்டு மக்களை கடனாளியாக்கியுள்ளார்கள் தற்போது 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் என கூறப்படுகிறது.
இந்த வீட்டுதிட்டம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் எமக்கு எதுவும் தெரியாது பயனாளிகள் தெரிவு எத்தகையது பொருத்தமான வீடா , பொருத்தமல்லாத வீடா , இரும்பு வீடா என்பது தொடர்பில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது எனவே வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதேச செயலாளர்கள்,வீட்டுதிட்ட ஒப்பந்த காரர்கள் களுடன் விசேட கூட்டம் நடாத்தி தெளிவுபடுத்த வேண்டும். என கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தார்கள்.
வீடமைப்பு தொடர்பில் அர சாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு மில்லியன் திட்டத்துக்கு 403 பயனாளரும் 6 இலட்சம் திட்டத்திற்கு 101 பயணாளரும் கோரியுள்ளதாகவும் இதில் ஆறு இலட்சம் திட்டம் என்பது தற்போதைய சூழ் நிலையில் சாத்தியமானதென்று அல்ல. இதனை குறைந்தது பதினைந்து இலட்சமாக உயர்த்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் எந்தவொரு திட்டமும் பயனாளரின் விருப்பமின்றி வழங்கப்படாது.
25 ஆயிரம் சூரிய மின்கலம் பொருத்திய வீட்டு திட்டத்திற்கு பயனாளிகள் பட்டியல் கிடைக்கவில்லை என்றும் அதன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு சென்றபின்னரே அவர் பிரதேச செயலகர்களுடன் அது தொடர்பில் தெளிவுறுத்திய பின்னர் அதற்கான பயனாளர்கள் தெரிவு நடைபெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் வீடு அற்றவர்களாக இருக்கின்ற நிலையில் இதில் 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை யாழ்ப்பாணத்துக்கு கொடுத்துள்ளதாகவும் அதற்காக இதுவரை 8957 பேருடைய பெயர்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதற்கான விசேட கூட்டத்தை விரைவில் ஏற்பாடு செய்வதாக ஆளுநர் தெரிவித்தார்.