இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் நிகழ்வு ஏற்பாட்டு குழுவினரின் சார்பில் பரமநாதன் குமாரசிங்கம், சுப்பிரமணியம் மோகனராசா இதனை தெரிவித்தார் .
மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடம் நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மலையகம் 200 நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள்,மலையகத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று (28) மேற்கொண்ட ஊடக சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நிகழ்வில் இந்திய தனியார் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்வின் பாடல் போட்டியில் வெற்றிப்பெற்ற கில்மிசா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோருக்கும் கௌரவிக்கப்படவுள்ளனர்.