புத்தாண்டு: சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை

108 0

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மெரினா கடற்கரை உட்புற சாலை வரும் 31-ந்தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவத்துக்காக மூடப்படும். அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் (ஆர்.கே சாலை) சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன.

பாரிமுனை சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை – விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை – நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை -டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை.

மேம்பாலங்கள் மூடப்படும்: தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

அடையாரிலிந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்படும். பாரிமுனையில் இருந்து அடையார்,திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பேருந்துகளும், ரிசர்வ் வங்கி சுரங்கபாதை வடக்கு பகுதிக்கு திருப்பிவிடப்படும். அனைத்து மேம்பாலங்களும் 31-ம்தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.