தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளியே சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.