சந்தேகநபரை கைதுசெய்வதற்கு ஈவிரக்கமற்ற விதத்தில் செயற்படும் பொலிஸார்

131 0
image

குருநாகல் பகுதியில் சந்தேகநபர்ஒருவரை பொலிஸார் மோசமாக தாக்குவதை காண்பிக்கும் வீடியோவொன்று சமூக ஊடகங்களில்வெளியாகியுள்ளது.

நான் தப்புவதற்கு முயற்சிக்க மாட்டேன் என அந்த நபர் தெரிவிக்கின்ற போதிலும் பொலிஸார் அவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகின்றனர்.

இரண்டு பொலிஸார் நிலத்தில் ஒருவரை மடக்கிபிடித்தபடி அவரை கயிற்றால் கட்டுவதற்கு முயல்வதை வீடியோவில் பார்க்க முடிகின்றது.

ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரின் மேல் அமர்ந்திருக்கின்றார் மற்றைய பொலிஸ்உத்தியோகத்தர் அவரை கயிற்றால் கட்ட முயல்கின்றார்.

அவ்வேளை சந்தேகநபர் அலறுவதையும் தனது கழுத்தை விடுமாறு மன்றாடுவதையும்  அவதானிக்க முடிகின்றது.

சந்தேகநபரின் காலை கட்டும் பொலிஸ்உத்தியோகத்தர் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தரிடம் சந்தேகநபர் தப்பமுடியாது என தெரிவிக்கின்றார்.

எனினும் சந்தேகநபர் மீது அமர்ந்திருக்கும்  பொலிஸ்உத்தியோகத்தர் சந்தேகநபரை விட மறுப்பதுடன் அவரின் கைகளையும் கட்டுமாறு கேட்கின்றார்.

பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரை பிடித்து வைத்து தாக்கும் வேளையில் சந்தேகநபர் தான் தப்பியோடமாட்டேன் என அலறுவதை அவதானிக்க முடிகின்றது.

போதைப்பொருள் பாவனைக்காகவே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் என  தகவல்கள் வெளியாகின்றன.