யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளை அடையாளம் காட்டுமாறு நெல்லியடி பொலிஸார் கோரியுள்ளனர்.
துன்னாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைதான போது, அவரிடம் இருந்து 19 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் மீட்டு இருந்தனர்.
குறித்த தொலைபேசிகள் களவாடப்பட்ட தொலைபேசிகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் , அண்மைய நாட்களில் தொலைபேசிகளை களவு கொடுத்தோர், நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து , தொலைபேசிகளை பார்வையிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்னர்.