மன்னார் சாந்திபுரம் பகுதியில் நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மன்னார் பொலிஸ் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் வலம்புரிச சங்கு வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஞாயிற்றுக்கிழமை (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடையவராவார்.