மாளிகாவத்தையில் கஞ்சா கலந்த மாவா உற்பத்தி பொருட்களுடன் ஒருவர் கைது

101 0
கொழும்பு – மாளிகாவத்தை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கு உற்பத்தி செய்யும் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (20) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் கஞ்சா கலந்த மாவா  3 கிலோ 520 கிராம், கஞ்சா போதைப்பாக்கு, மின்சார தராசு, இரசாயனப் பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.