ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடமாட்டார்

139 0

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன  வேட்பாளரை நிறுத்தும் தற்போதைய ஜனாதிபதியை வேட்பாளராக நியமிக்காது என ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள அவர் நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான தற்போதைய ஜனாதிபதியின் திறன்  குறித்து தனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளிற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே காரணம் என தெரிவித்துள்ள உதயங்க 2015 முதல் 2019 வரை கடன் பெருமளவிற்கு அதிகரித்தமைக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே கடன் பலமடங்காக அதிகரித்தது எங்கள் கட்சி ரணி;ல்விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளதால் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் ஆனால் அவரால் பொருளாதாரத்திற்கு புத்துயுர் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலே இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை நிறுத்தும் ரணில்விக்கிரமசிங்கவை கட்சி நியமிக்காது ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடமாட்டார் என உங்களிற்கு உறுதியளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.