சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

163 0

சுவிசில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம்,
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 17.12.2023 ஞாயிறு அன்று பிறிபேர்க் மாநிலத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், ஈகச்சுடர்கள் ஏற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சுடர் வணக்கமும் மலர்; வணக்கமும் செலுத்தப்பட்டது.

மாவீரவித்துகளான அரசியல் பெருந்தகைகள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வில் எழுச்சி வணக்கப்பாடல்களுடன் பல்லிசைக் கோர்வையில் எழுச்சிப்பாடல்களும், கவிவணக்கம், பேச்சுகளுடன் சிறப்புரையும் இடம்பெற்றன. எழுச்சி நடனத்துடன் நெருப்பின் சலங்கை சிறப்பு நடனமும் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.நிகழ்வின் நிறைவாக ‘நம்புங்கள் தமிழீழம்…’ பாடலை அனைவரும் இணைந்து பாடி தமிழீழத் தேசியக்கொடி கையேற்கப்பட்டதனைத் தொடர்ந்து உறுதியேற்புடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.