வைத்திய அதிகாரிகள் சங்கம் – பொலிஸ் மா அதிபர் சந்திப்பு

110 0
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தித்துள்ளது.

GMOAவின் செயலாளர் ஹரித அளுத்கே உள்ளிட்ட குழுவினர், பதில் பொலிஸ் மா அதிபரை நேற்று புதன்கிழமை (20) சந்தித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பின் போது சமுதாயத்தில் தம்மை மருத்துவர்களாகக் காட்டிக் கொள்ளும் போலி வைத்தியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தியதுயதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.