இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் வடக்கு காசா சீர்குலைந்துள்ளது. பழைய நிலைக்கு வர அது நீண்ட காலம் எடுக்கும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்காக உடனடியான போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில எப்படியாவது போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றிட முயற்சி செய்து வருகிறது.இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காசாவை அழிக்க நினைக்கிறது.
ஒரு இனத்திற்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என போர்க்கொடி எழுந்துள்ளது.ஆனால், காசாவில் இருந்து இனிமேல் இஸ்ரேல் மண்ணுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.இதுறித்து இமானுவேல் மேக்ரான் கூறுகையில் “பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதை, காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது ” என்றார்.அதேவேளையில் “இஸ்ரேல் இந்த பதிலடி தாக்குதலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தாக்குதல் பொருத்தமானது அல்ல. அனைத்து உயிர்களும் ஒரே மதிப்பிலானவை. அவர்களை நாங்கள் பாதுகாக்கிறோம்.
தன்னை பாதுகாத்து கொள்வதும், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் இஸ்ரேலுடைய உரிமை. பொதுமக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் வழிவக்கும் ” என்றார்.இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.