மதுபோதையில் காரை செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது

93 0

மதுபோதையில் காரை செலுத்திச் சென்றதாக கருதப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய பிரித்தானிய பிரஜையாவார்.

பொலிஸாரால் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.