யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விவசாயி கைது!

85 0

சோளம் பயிரிடப்பட்ட பகுதியை சுற்றி மின்சார கம்பியை பயன்படுத்தி வேலியிட்டதால் யானை  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  54 வயதான  விவசாயி ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கஹடகஸ்திகிலிய  அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹடகஸ்திகிலிய ரத்மல்கஹவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹடகஸ்திகிலிய, நெலுகொல்லக்கடை   பிரதேசத்தில் அமைந்துள்ள சோளப் பயிர் செய்கை காணியில் 35 வயதுடைய 8 அடி உயரமான  யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமையையடுத்தே அவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.