பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

101 0

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் தங்காலை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவராவார்.

பொலிஸாரால் குடாவெல்ல மீன்பிடித் துறைமுக பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர் கூரிய ஆயுதங்களால் பெண்ணொருவரையும் நபரொருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் வீடொன்றை உடைத்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.