சம்மாந்துறையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

89 0
சம்மாந்துறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பின் போது 6640 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 260 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன .அத்தோடு சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்ததாவது,

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (19)பொலிஸ் திணைக்களத்தின் விசேட செயற்திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை பொலிஸாரினால்  தென்கிழக்கு பல்கல்கழைக்கத்தின் சம்மாந்துறையில் உள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தை அன்டிய பகுதியில் சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது  போதை விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை பெறுங்குற்றவியல் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே சதீஸ்கரன் தெரிவித்தார்.

இவரை கைது செய்த போது இவரிடம் 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் ,260 போதை மாத்திரைகள் அத்தோடு இன்னும் ஒருவரிடம் 40 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.