மொரட்டுவையில் பெண் மாயம் – தகவல் திரட்டும் பொலிஸார்

120 0
மொரட்டுவை பிரதேசத்தில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போனவர் மொரட்டுவை , ராவதாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஷாமலி பொன்சேகா என்ற பெண்ணாவார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அன்று மாலை 5.45 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இவர் காணாமல் போன சந்தர்ப்பத்தில் பச்சை நிற மேல் சட்டை மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 077 719 7053 , 077 232 7053 மற்றும்  077 925 4457 என்ற தொலைபெசி இலக்கங்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.