புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

79 0

புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் இன்று புதன்கிழமை (20) இராணுவத் தலைமையகத்தில் உள்ள தனது புதிய அலுவலகத்தில் ‘மகா சங்க’ உறுப்பினர்களின் ‘செத்பிரித்’ பாராயணங்களுடன் நடைபெற்ற நிகழ்வின்போது கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது பிரதி பதவி நிலை பிரதானி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி அலுலகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.