பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் குறித்து அறிவிப்பு!

115 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் தம்மிக்க பெரேராவும் உள்ளடங்குவதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கட்சி என்ற ரீதியில் எதிர்வரும் தேர்தல்களில் மிகுந்த பலத்துடன் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

கட்சிகளுக்கு அனைத்து நாட்டு மக்களுக்கும் நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம் என்பதை கூற விரும்புகின்றோம்.

கட்சி என்ற ரீதியில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

மூன்று அல்லது நான்கு வேட்பாளர்கள் குறித்து நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

அவர்களில் தம்மிக பெரேராவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தகுதியான நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய திறமையான வேட்பாளர் ஒருவரை முன்னிருத்தவே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

அந்த விடயத்தை கட்சி தீர்மானித்தும் நாங்கள் அறியத்தருவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.