ஜேர்மனியில், ஜேர்மன் நாட்டவர்களாகிய பணியாளர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டிவரும் நிலையில், அடுத்த தலைமுறையோ முழுநேர வேலையில் ஆர்வம் காட்டவில்லை. ஆக, ஜேர்மன் பொருளாதாரத்தை சீரான நிலையில் வைத்திருக்க புலம்பெயர்தல் அவசியம் என்கிறார்கள் பொருளாதாரத்துறை நிபுணர்கள்.
ஜேர்மனியில் மட்டுமல்ல, பல ஐரோப்பிய நாடுகளில் பணியாளர்கள் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டிவருகிறார்கள். ஜேர்மனியில், பிறப்பு வீதம் குறைந்துவருகிறது. மேலும், அடுத்த தலைமுறையோ, பகுதி நேரப் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறது.
இளைய தலைமுறையினர், வேலை செய்யும் அதே நேரத்தில், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதும் அவசியம் என கருதுகிறார்கள். ஆகவே, முழு நேரப் பணி செய்ய போதுமான ஆட்கள் இல்லை.எனவே, மருத்துவம், தொழில்நுட்பம் முதலான துறைகளில் மட்டுமல்லாது, நெசவு, பேக்கரி போன்ற பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுவதால், பணி வழங்குவோர் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
எனவே, மருத்துவம், தொழில்நுட்பம் முதலான துறைகளில் மட்டுமல்லாது, நெசவு, பேக்கரி போன்ற பணிகளுக்கும் ஆட்கள் தேவைப்படுவதால், பணி வழங்குவோர் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேடத்துவங்கியுள்ளார்கள்.
இன்னொரு பெரிய பிரச்சினை, அதிகரித்துவரும் வலதுசாரிக் கட்சிகள். அவர்கள் புலம்பெயர்தலைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதனால், அகதிகள், புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் வாழும் நிலைமை கூட சில நேரங்களில் உருவாகிறது.
விடயம் என்னவென்றால், சமீபத்தில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்ற மாகாணங்களுக்குத்தான் அதிக வெளிநாட்டுப் பணியாளர்கள்தேவைப்படுகிறார்கள். அரசியல் ரீதியாக அவர்கள் புலம்பெயர்ந்தோரை எதிர்த்தாலும், நடைமுறையில், அவர்கள் புலம்பெயர்தலை எதிர்த்தால், அவர்களுடைய மாகாண பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக பாதிக்கப்படும் என்கிறார்கள் பொருளாதாரத்துறை நிபுணர்கள்.