இந்த மண்சரிவு இன்று புதன்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.இப் பகுதியில் வரிசையாக அமைந்துள்ள வீடுகளை சேர்ந்த 10 குடும்பங்கள் இவ்வாறு முன் எச்சரிக்கை நிமித்தம் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஸ்பிரிங்வெளிவத்த பிரதேசத்தில் வீடுகளுக்கு அடியில் இருந்த மண்மேடே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த இடத்தை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் செயற்பட்டு வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.