வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

79 0

கம்பஹா – ஹக்கல்ல வீதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சனோஜ் மதுசங்க என்ற தம்புடுவை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாயாவார்.

இவர் ஹல்கமவிலிருந்து ஹக்கல்ல பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஹக்கல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.