பொதிகள் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனை : யாழ். பல்கலையின் மருத்துவ பீட மாணவன் கைது!

109 0

பொதிகள் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும்  யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த  23 வயதான ரம்பேவ, சியம்பலாவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து போதை மாத்திரைகளும்  மயக்க மருந்து மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாகவும்    பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.