பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சே. அருணாசலம் (19) என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அச்சம் நிலவுகிறது.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனி அருகே திருமால் நகரை சேர்ந்த சேர்மன் மகன் அருணாசலம். கடந்த 2 நாட்களுக்கு முன் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மழை வெள்ளத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டதாக அச்சம் நிலவுகிறது.
அவரை காணவில்லை என்று பெருமாள்புரம் போலீஸில் அருணாசலத்தின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். இதனிடையே என்.ஜி.ஓ. காலனியிலுள்ள ஓடையில் தீயணைப்பு படையினர் தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அருணாசலம் சென்ற மோட்டார் சைக்கிளை இரவில் தீயணைப்பு படையினர் மீட்டனர். தொடர்ந்து தேடும் பணி நடைபெற்றது.