பணத் தூய்மையாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதி வழங்குதலை முறியடிக்கும் தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு கரும நிர்ணய ஆலோசனை மற்றும் செயலணியை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதியளித்தலை ஒழிப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்பு குழு, தொடர்புடைய அரச நிறுவனங்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்தக்கு நிதியளித்தலை ஒழிக்கும் முயற்சிகளுடன் தொடர்புபட்ட பிரதிநிதிகளை கொண்டமைந்துள்ளது.
தேசிய ஒருங்கிணைப்பு குழுவிலுள்ள செயன்முறையை முறைமைப்படுத்துவதற்காக குறித்த குழுவுக்கான கரும நிர்ணய ஆலோசனை வரைபு செய்யப்பட்டுள்ளது.
கரும நிர்ணய ஆலோசனை மற்றும் செயலணியை நிறுவுதல், பணத் தூய்தாக்கலைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாத்துக்கு நிதி யளித்தலை ஒழிக்கும் போது தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அரச நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக ஒரு செயலணியை நிறுவ வேண்டியது கட்டாயமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு உத்தேச கரும நிர்ணய ஆலோசனைக்காகவும், செயலணியை நிறுவுவதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.