பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகள் அளிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்திட்டம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் செயற்படவுள்ளது.
24 மணித்தியாலமும் செயற்படக் கூடியதாக உள்ள இந்த தொலைபேசி இலக்கத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்.
இந்த தொலைபேசி இலக்க சேவையில் பெண் பொலிஸார் கடமையில் இருப்பார்கள்.
இந்த தொலைபேசி இலக்கத்துடன் நாட்டில் எந்த பகுதியிலிருந்தும் தொடர்பு கொள்ளலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.