மான் இறைச்சி, உள்நாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் கைது

75 0
குருணாகல், எஹெதுவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் குருணாகல், கோன்வெவ  பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார்.

எஹெதுவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவரிடத்திலிருந்து 7 கிலோ 250 கிராம் நிறையுடைய மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெதுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.