யாழ் மக்களின் அன்பு அளப்பரியது – ரம்பா

134 0

யாழ்ப்பாண மக்களின் அன்பு அளப்பரியது என தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் இன்று செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் நல்லையம்பதி அலங்கார கந்தனின் சண்முக அர்ச்சனையினை முன்னிட்டு நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தனது குடும்பத்துடன் வருகைத்தந்தார் .

விஷேட வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருவது இதுதான் முதற்தடவை மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் அழகான ஒரு மாவட்டம்.

அடிக்கடி நாங்கள் வருவோம். தற்போது பிள்ளைகளுக்கான பொழுது போக்குக்காக வந்ததோம்.

ஹரிகரனின் இசை நிகழ்ச்சிறயானது எதிர்வரும் டிசம்பர் 21 அன்று நடத்தவிருந்த நிலையில் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக  நடைபெறமால் போய் விட்டது.

அது மிகவும் கஷ்டமாக இருக்கு அதற்காக கவலை அடையவில்லை. எதிர்வரும் மாசி மாதம் 09.02.2024 அன்று வரயிருக்கின்றோம்.

இந்திய பிரபலங்கள் வளிமண்டத்தில் ஏற்பட்ட தாழ்யழுக்கம் காரணமாக அடுத்ததடவை வருவார்கள் என்று நம்புகின்றேன்.

இந்த வருடம் கொழும்பு, யாழ்ப்பாணம் மட்டும்தான் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளோம். பின்னர் டுபாய்க்கு சுற்றுலா விடுமுறையினை கழிக்க போகின்றோம். அதுபிள்ளைகளின் பயணமாக இருக்கின்றது. என்றார்.

மேலும் இதுதொடர்பாக நோத் யூனியின் தலைவரும் தொழிலதிபருமான ப.இந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கான நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் 10,000 மாணவர்களுக்கான கல்வியினை வழங்க எதிர்பார்த்து இருக்கின்றோம்.

வசதிகுறைந்த மாணவர்களும் படிப்பதற்கான லோன் அடிப்படையில் கல்வியினை கற்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இங்க கற்றவர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எங்களுக்கு உழைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை? எங்களது சந்தயினருக்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் எங்களிடம் இருக்கிறது.

அது வட அமெரிக்கா, இந்தியாவிலும், இருக்கிறது. அதுவும் வடக்கு மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் வந்துள்ளோம் என்றார்.