பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற இளைஞன் கைது!

72 0

14 வயது 06 மாத பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவகத்தேகம – வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (19) ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.