அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பெரும் மழை வெள்ளம்

90 0

வடகுயின்ஸ்லாந்தில்பெரும் வெள்ளத்தில் சிக்குண்டுள்ள மக்கள் அவசர உதவியை கோரியுள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் தொலைதூர வடபகுதியில் சிக்குண்டுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிற்கான விநியோகங்கள் முடிவடையும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அவசர இராணுவதலையீட்டிற்காக காத்திருக்கின்றனர் என டக்ளஸ் சயரின் மேயர்  தெரிவித்துள்ளார்.

குக்டவுன்முதல் இனிஸ்பெயி;ல் வரை பல நகரங்கள் வெள்ள நீரினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதான வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன

கெயர்ன்சின் மக்களை அவசரதேவைக்காக மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் தங்களை வெளியேற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கெயர்ன்சின் விமானநிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது.

வுஜல் வுஜலில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புளும்பீல்ட் மற்றும் டெகாராவில் கூரைகளின் மீது சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

இங்காம் முதல் வுஜல் வுஜல் வரை வெள்ளநீரில் முதலைகள் காணப்பட்டுள்ளன.

மிகவும் கடினமான சூழ்நிலையில் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக குயின்ஸ்லாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உங்களிற்கு நேற்றைய இரவு மிகவும் கடினமானது என்பது எங்களிற்கு தெரியும் எங்களின் வீரர்கள் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பாதுகாப்பாக வெளியேற முடியாதவர்களை வெளியேற்ற எங்களால் பயன்படுத்த முடிந்த அனைத்து படகுகளையும் பயன்படுத்தினோம்,மேலும் உதவிகளை வழங்கிவருகின்றோம் என  பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் டக்ளஸ் சயரின் மேயர் மைக்கல் கெர் மூஸ்மானிற்கு அருகில் உள்ள மக்கள் அவசர இராணுவஉதவிக்காக காத்திருக்கி;ன்றனர் என குறிப்பிட்டுள்ளதுடன் பல பொதுமக்கள் மி;ன்சாரமும் நீரும் இல்லாத நிலையில் உள்ளனர் அவசரமாக வெளியேற்ற வேண்டிய நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் வெள்ளத்தில் மத்தியில் முதலை காணப்பட்டமை பெரும் அச்சத்தை ஏற்படு;த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் வடபகுதியில் உள்ள தொலைதூர நகரமொன்றில் வெள்ளத்தின் மத்தியில் நீந்திவந்த முதலை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2.5 மீற்றர் நீளமான முதலையை மீட்டுள்ளதாக குயின்ஸ்லாந்தின் பூங்கா மற்றும் வனவிலங்கு சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் வெளியான பதிவை அடிப்படையாக வைத்தே தாங்கள் எச்சரிக்கை அடைந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்பூனை பயன்படுத்தி முதலையை பிடித்துள்ளோம் ஹார்பூன் முதலையின் தோலை தாக்கும் ஆனால் காயங்களை ஏற்படுத்தாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்பூனை பயன்படுத்துவது நேரடியான முறை எனினும் முதலைக்கு அருகில் அது நீரில் மறைவதற்கு முன்னர் செல்வதற்கு மிகுந்த துணிச்சல் அவசியம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.