வட மாகாண பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

407 0

indexவட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவாட்ட செயலகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடத்த இரண்டு வருடங்களாக பல போராட்டங்களில் ஈடுபட்டுவரும் போதிலும், தமது பிரச்சினையினை கவனத்தில் கொள்ளாது அரசு செயற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பட்டதாரிகளான தாம் நீண்டகாலமாக வேலையின்றி பல சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு பூராகவும் வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில் தற்போது கல்வி பொதுத்தராதர சாதாரண தர தகமையுடன் உள்ள தொண்டர் ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அரசின் முயற்சிக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசத்திலும் உள்ள பட்டதாரிகள் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கக் கோரி வடமாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.அரசாங்கத்தினாலும், வடமாகாண சபையினாலும் வேலையில்லாத பட்டதாரிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

தற்போதும் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஆசிரியர், தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என்ற பகுப்பாய்வின் கீழ் வேலை வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.இவற்றில் வடமாகாண சவையினால் தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

யுத்த காலத்தில் பணியாற்றிய தொண்டராசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்க நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.ஆனால் அரசியல் செல்வாக்குகளினால் தொண்டராசிரியர் ஆக்கப்பட்டவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம்.31 ஆயிரம் பேருக்கான ஆட்சேர்ப்பில் வேலையில்லாமல் உள்ள பட்டதாரிகளை முதன்மைப்படுத்தி அவர்களுக்கான வேலைகளை வழங்குமாறு கோரியே அவர்கள் இப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

IMG_5496 IMG_5497

K800_20160723_102009 K800_20160723_102050 K800_20160723_102109