பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து நேற்று மாலை தப்பிச்சென்ற கைதிகளில் 104 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச்சென்ற ஏனைய கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை குறித்த நிலையத்தில் இருந்து சுமார் 140 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து, கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் அமைந்துள்ள பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.