மழையால் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதம்: மின்வாரியத்துக்கு ரூ.100 கோடி இழப்பு

86 0

புயல் காரணமாக பெய்த அதிகன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கம்பங்கள், மின் மாற்றிகள் உள்ளிட்ட பல மின்சாதனங்கள் சேதம் அடைந்தன.

மேலும், மின்கோபுர வழித் தடங்களும் சேதம் அடைந்தன. அத்துடன், 5-க்கும் மேற்பட்ட துணைமின் நிலையங்களில் வெள் ளம் சூழ்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மழை காரணமாக சேதம் அடைந்த பொருட்களை மின் வாரியம் கணக்கெடுத்து வருகிறது. இதன்படி, தற்போது வரை ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் வடிந்த பிறகு, சேத கணக் கெடுப்பு பணி நடைபெறும். இதனால், மின்வாரியத்துக்கு இழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.