அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அரசாங்கம் கொவிட்டிற்கு முன்னரான அளவிற்கு குடியேற்றவாசிகள் உள்வாங்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்களிற்கான – தொழிலாளர்களிற்கான low-skilled workers விசா கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கவுள்ளதாக அல்பெனிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களில் குடியேற்றவாசிகளின் எண்ணி;க்கை என்றுமில்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
ஆனால் தொழிலாளர்களிற்குskilled workers, பற்றாக்குறை நிலவுகின்றது அவர்களை கவர்ந்திழுக்கும் விடயத்தில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தினால் குடிவரவு அமைப்பு முற்றாக சிதைவடைந்துவிட்டது என உள்துறை அமைச்சர் கிளார் ஒ நெய்ல் தெரிவித்துள்ளார்.
2023 இல் ஜூன் மாதம் வரை 510000 குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்,