பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடை வலயங்களில் உள்ள அத்தகைய பாடசாலைகளின் பட்டியலை உடனடியாக வலயக் கல்வி அலுவலகங்களுக்கு சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தினார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற கம்பஹா கல்விக் கட்டமைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இவ்வாறான பாடசாலைகளை இனங்கண்டு, அடுத்த வருட ஆரம்பத்திற்குள், முன்னுரிமை அடிப்படையில் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.