ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டும் தேசிய ரீதியாக கொண்டு வரப்படுவதன் நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனங்கள் இரண்டையும் ஒன்றிணைப்பதற்காக துறை சார்ந்தவர்களின் குழுவொன்றை நியமிப்பதாகவும் தெரிவித்தார். அதனூடாக இந்நிறுவனங்களில் வளங்களை நன்றாக முகாமைத்துவம் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொலைக்காட்சியை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் விபரித்தார்.
அரச ஊடக நிறுவனங்களின் நட்டத்தை இவ்வருடத்தில் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய தொலைக்காட்சியில் கடந்த வருடத்தில் 541 மில்லியன் ரூபா வாகக் காணப்பட்ட நட்டம் இவ்வருடத்தில் 274 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. சுயாதீன தொலைகாட்சி சேவையில் 361 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நட்டத்தை 189மில்லியன் ரூபவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருட நட்டம் 236 மில்லியன் ரூபாய்கள். அது இவ்வருடத்தில் 147 மில்லியன் ரூபாய்களாகும். லேக் ஹவுஸ் நிறுவன நட்டம் கடந்த வருடம் 198 மில்லியன் ரூபாய்களும், இவ்வருடம் 66மில்லியன் ரூபாய்களாகக் குறைந்துள்ளது.
இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இந்நிறுவன ஊழியர்களுக்காக சுயமாக ஓய்வு பெறும் முறை காணப்படுவதாகவும், அதற்கிணங்க இந்த அரச ஊடக நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் மற்றும் நூல்களுக்காக வரி அறவீடு தொடர்பாகவும் தான் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.