இராணுவ பேருந்தில் மோதி தாயும் மகளும் காயம்

113 0

முல்லைத்தீவு – சிலாவத்தை வீதியில் இராணுவ பேருந்துடன் மோதி இளம் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விருவரும் சிலாவத்தை பகுதியில் இருந்து உந்துருளியில் ஞாயிற்றுக்கிழமை (10) இரவு  பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி, பயணித்துக்கொண்டிருந்த இராணுவ பேருந்துக்குள் சிக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த சிலாவத்தை பகுதியினை சேர்ந்த தாயும் சிறுமியும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இராணுவத்தினரின் பேருந்தின் சாரதியினையும் பேருந்தையும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.