பொலிஸ் தலைமையகத்தில் மீண்டும் ‘மக்கள் நிவாரண தினம்’ : 15ஆம் திகதி ஆரம்பம்!

67 0

பொலிஸ் தலைமையகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மக்கள் நிவாரண தினத்தை மீள ஆரம்பிக்க பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, பொது விடுமுறை தினங்கள் தவிர்ந்த அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பொலிஸ்மா அதிபர் பொது நிவாரண தினம் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு புலனாய்வு திணைக்களங்களுக்கு பொதுமக்கள் சமர்ப்பிக்கும் முறைப்பாடுகளில், நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளைச்  சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.