ராகமை அடகு கடையொன்றில் கொள்ளையிட்ட ஐவர் கைது

56 0
ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடகு கடையில் கொள்ளையிடப்பட்ட 14 கோடி ரூபா பெறுமதியான தங்கப் நகைகளும், ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோருக்கு தெரிந்தே இடம்பெற்றுள்ளதுடன் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.