பண்டாரகம, ராஜாகம பிரதேசத்தில் பண்டாரகம பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30 மற்றும் 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து 5,320 மில்லிகிராம் போதைப்பொருள், பித்தளையால் செய்யப்பட்ட இரண்டு வளையல் மற்றும் சிலைகள், தங்க நகைகள், புல் வெட்டும் இயந்திரம், கல்வெட்டு, போன்றவைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் சந்தேகநபர்கள் பண்டாரகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.