எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுருத்தகம பகுதியில் வைத்து தாய் மற்றும் அவரது மகன் மீது நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (11) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் 55 வயதுடைய பெண்ணும் அவரது 25 வயது மகனும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் எல்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று அழைக்கப்பட்ட பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.