கஹாதொடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஹாதொடுவ, மொரகஹாஹேன பிரதேசங்களில் வீடுகள் மற்றும் கடைகளை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கஹாதொடுவ பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவராவார்.
விசாரணையில் திருடிய பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹாதொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.