இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

84 0

பொலன்னறுவை, சுங்கவில வீதியில் 16 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரு சாரதிகளும், பின்னால் சென்ற இருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சாரதி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் சுங்கவில பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – மாத்தறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.