இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளின் நினைவு முத்திரை

47 0
image
இலங்கைக்கும் எகிப்துக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு 66 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் அண்மையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்  கலாநிதி பந்துல குணவர்தனவினால்  பிரதமர்  தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேர்தன மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே உள்ளிட்ட பிரமுகர்களுக்கு நினைவு முத்திரை கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில்,

இலங்கையில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதலாவது அரபு நாடாக 1957ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முக்கிய வருடமாக அமைந்தது.  பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மகத்தான வரலாற்றைக் கொண்ட இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் மகத்தான நட்புறவை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மஜீட் மொஸ்லே தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான 66 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் முகமாக எகிப்து அரசாங்கமும் நினைவு முத்திரையொன்றை வெளியிடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, குழுக்களின் பிரதித் தவிசாளர்  அங்கஜன் இராமநாதன், சபை முதல்வர் அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.