கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில்…(காணொளி)

330 0

 

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டப் படிப்பு முடித்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க கோரி கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதிக்கு கிடைக்கும் வகையில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இன்றுடன் 32 நாட்களாக யாழ் மாவட்ட செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ரூடவ்டுபட்டு வருவது யாவரும் அறிந்ததே.

எனினும் எமது இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கான எந்த விதமான சாதகமான பதில்களும் உரிய தரப்புக்களிடம் இருந்து கிடைக்கப் பெறாமையானது மன வேதனையளிக்கின்றது.

27.02.2017 திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்பு போராட்டத்தில் 31.03.2012காலப்பகுதிக்கு பின் எமக்கான எந்த விதமான அரச நியமனங்களும் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தோம்.

2015 ஆம் ஆண்டிலும் எமது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வட மாகாண

முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்களை வழங்குக” எனும் கொள்கையின் அடிப்படையில் காலவரையறையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எமது கவனயீர்ப்பு போராட்டத்தின் 11 ஆவது நாள் வட மாகாண சபை அமைச்சர்களுக்கும் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடலில் வட மாகாணத்திலுள்ள அரச வெற்றிடங்களில் பட்டதாரிகளை உள்ளீர்த்தல் வேண்டும். பட்டதாரிகளின் பட்டச்சான்றிதழின் இறுதித் திகதியின் அடிப்படையில்உள்ளீர்த்தல் வேண்டும்.

தொண்டராசிரியர் நியமனத்திலுள்ள முறைகேடுகளை விசாரணை செய்து ஆரம்பப்பிரிவுஆசிரியர் சேவைகளில் பட்டதாரிகளை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.