கருணாநிதி நூற்றாண்டு விழா: ஜன.5, 6 தேதிகளில் படப்பிடிப்பு ரத்து

123 0

 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தமிழ் திரையுலகம் சார்பில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடத்த உள்ளனர். வரும் 24-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இந்த விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர். இதனால் வரும் 23, 24-ம் தேதிகளில் படப்பிடிப்புகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக இந்த விழா,ஜனவரி 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ம் தேதிகளில் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் அதற்குப் பதிலாக ஜன.5 மற்றும் 6-ம் தேதிகளில் படப்பிடிப்பு உட்பட திரைத்துறையின் அனைத்துப் பணிகளும் உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெறாது என்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தெரிவித்துள்ளது.

மேலும் ஜன.1 முதல் 5ம் தேதி வரை நடனக் காட்சிகளைத் தவிர்க்குமாறும் கட்டாயம் என்றால், சிறப்பு அனுமதி பெற்று அமைக்குமாறும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.