யாழில் 42வயதுடையவர் சடலமாக மீட்பு!

275 0

திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று (29.03.2017) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள கடையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று நீண்ட நேரமாகியும் கடையை விட்டு அவ்விளைஞன் வராததால் அவரை தேடி அயலவர்கள் அக்கடையினுள் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து யாழ்ப்பாண பொலிசாருக்கு சம்பவம் தொடர்பாக அறிவித்தமையை தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சிவலிங்கம் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார். இறந்தவர் 42 வயதான பாலசிங்கம் பாலமுரளி என்பவராவார்.