ஹரக் கட்டா, குடு சலிந்துவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி!

56 0

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக மற்றும் குடு சலிந்து ஆகியோரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக விக்கிரமரத்னவை உடனடியாக உரிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதற்கு போதிய தகவல்கள் இல்லாவிட்டால், அவ்வாறு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஹரக் கட்டா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது