மட்டக்களப்பில் ஆபாச திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையடக்க தொலைப்பேசியில் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்து அதனை பயன்படுத்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்தின் பெண்ணொருரின் பெயரில் சமீபத்தில் ஆபாச திரைப்படமொன்று வௌியிடப்பட்டுள்ளதாக காவற்துறைக்கு தகவல் கிடைத்திருந்தது. விசாரணைகளில், கைது செய்யப்பட்ட இருவரும் வைபவங்களில் காணொளி பதிவு செய்யும் நபர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , மட்டக்களப்பு காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.